முன்கூட்டியே வெளியாகும் 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்- தமிழக அரசு
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்புக்கான தேர்வுகள் முடிவடைந்து வினாத்தாள்களை திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மே 19ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் போல 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் முன்கூட்டியே வெளியாகுமா என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் நாளை மறுதினம் (மே 16) காலை 9 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு முடிவுகளை, மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |