10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
நிகழ் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.
பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நுலக அரங்கில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அட்டவணையை வெளியிட்டார்.

அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2ஆம் திகதி தொடங்கி மார்ச் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மேலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ஆம் திகதி தொடங்கி ஏப்ரல் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் திகதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 8ஆம் திகதி தேர்வு முடிவுகள் வெளியாகும்.
மேலும் தேர்தல் ஆணையத்திடம் பேசிய பின்னரே தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |