இன்று ஆரம்பமாகும் 10-ம் வகுப்பு பொது தேர்வு - வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்
இந்தியாவில் தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.
ஆரம்பமாகிய பொது தேர்வு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஆரம்பமாகியுள்ளது.
இன்று முதல் ஏப்ரல் 8 ஆம் திகதி வரையில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
12 ஆயிரத்து 616 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 38 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.
இதில் தனியாக விண்ணப்பித்து தேர்வு எழுதுபவர்களுள் 28 ஆயிரம் பேரும், 235 சிறைக் கைதிகளும் அடங்குவர்.
இந்த தேர்வானது 4 ஆயிரத்து 107 பரீட்சை நிலையங்களில் நடைபெறுகிறது.
கண்காணிப்பிற்காக 48 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை பிடிக்க 4 ஆயிரத்து 591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பரீட்சை நிலைங்களுக்குள் மின்சாதன பொருட்கள் கொண்டு செல்வதில் அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் மாணவர்கள் அனுமதி அட்டையில் குறிப்பிட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
+1 மாணவர்களின் பரீட்சை நேற்று முடிவடைந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
+1 அரியர் மாணவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 6 ஆம் திகதியில் இருந்தும், இதர மாணவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 15ஆம் திகதியில் இருந்தும் திருத்தம் செய்யப்படவுள்ளது.
மேலும் இன்று பரீட்சைக்கு தோன்றியுள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜயும் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |