10 ஆம் வகுப்பு படித்திருந்தால் ரூ.63,000 வரை அஞ்சல் துறையில் சம்பளம் பெறலாம் - எப்படி தெரியுமா?
சென்னையில் உள்ள இந்திய அஞ்சல் துறையின் மெயில் மோட்டார் சர்வீல் போன்ற பிரிவுகளில் வேலைவாய்ப்பு இருப்பதாக விண்ணப்பவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அமைப்பு: India Post (இந்திய அஞ்சல் துறை)
பதவியின் பெயர்: Skilled Artisans
காலியிடங்கள்: 10
காலியிட விபரம் :
- M.V Mechanic - 4
- M.V Electrican - 1
- Tyre Man - 1
- Blacksmith - 3
- Carpenter - 1
மாத சம்பளம்: மாதம் ரூ. 19,900 முதல் ரூ. 63,200 வரை
வயது வரம்பு: 01.07.2024 திகதியின்படி, 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பின் அரசு விதிமுறையின் படி, SC,ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
கல்வித் தகுதி:
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் IDI முடித்திருக்க வேண்டும்.
- M.V பிரிவில் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். அல்லது 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை: டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தேர்வு நடைபெறும் இடம், நாள், பாடத்திட்டம் குறித்து நுழைவுச்சீட்டு மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: இந்திய அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கும் போது ரூ.400 கட்டணத்தை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து பதிவு செய்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: The Senior Manager. Mail Motor Service, No:37, Greams Road, Chennai - 600006
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |