பொதுத்தேர்வின்போது குழந்தை பெற்றெடுத்த சிறுமி: கூறிய அதிர்ச்சி தகவல்
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிக்கொண்டிருக்கும்போது சிறுமி ஒருத்தி குழந்தை பெற்றெடுத்த விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பொதுத்தேர்வின்போது குழந்தை பெற்றெடுத்த சிறுமி
மத்தியப்பிரதேசத்திலுள்ள தார் மாவட்டத்திலுள்ள பள்ளி ஒன்றில் செவ்வாயன்று 15 வயது சிறுமி ஒருத்தி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிக்கொண்டிருந்திருக்கிறாள்.
அப்போது திடீரென தனக்கு வயிறு வலிப்பதாகக் கூறி கழிவறைக்குச் சென்றுள்ளாள் அவள்.

வயிறு வலி என்று கூறிச் சென்ற மாணவி தேர்வுக்குத் திரும்பாததால் ஆசிரியைகள் அவளைத் தேடிச் செல்ல, கழிவறையில், கையில் குழந்தை ஒன்றுடன் அவள் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவளது பெற்றோருக்கும் பொலிசாருக்கும் தகவலளிக்கப்பட, பொலிஸ் விசாரணையில், அந்தச் சிறுமிக்கு அறிமுகமான ஒரு இளைஞன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அவளை சீரழித்துவந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தான் கர்ப்பமுற்ரதை அறிந்த அந்தச் சிறுமி, வீட்டுக்குத் தெரிந்தால் அவமானம், பெற்றோர் தண்டிப்பார்கள் என பயந்து தான் கர்ப்பமுற்றதையும் மறைத்துவந்துள்ளாள்.
அவள் கூறிய தகவல்களைத் தொடர்ந்து தற்போது பொலிசார் வழக்கொன்றை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNELல் இணையுங்கள் |