ஆசிரியர்கள் கிண்டல் செய்ததால் 6வது மாடியில் இருந்து குதித்த மாணவன்! பரிதாப பலி
இந்திய மாநிலம் மேற்கு வங்கத்தில் 10வகுப்பு மாணவன், 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
10ஆம் வகுப்பு மாணவர்
மேற்கு வங்காளம் மாநிலம், தெற்கு பர்கனாஸ் மாவட்டம் கஸ்பா பகுதியில் 10ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஷேக் ஷான் (16) என்ற அந்த மாணவர் தனியார் பள்ளியொன்றில், 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் சரியாக பாடம் படிக்காததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை ஷேக் ஷான் பள்ளி கட்டிடத்தில் இருந்து விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தந்தை குற்றச்சாட்டு
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் மாணவரின் உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் ஷேக் ஷான் தற்கொலை செய்துகொள்ள பள்ளியின் 6வது மாடிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்துள்ளார் என தெரிய வந்தது.
இதற்கிடையில், இரு ஆசிரியர்கள் கிண்டல் செய்ததால் தனது மகன் மனமுடைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் ஷேக் ஷானின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
Getty Images/iStockphoto
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |