தயவு செய்து தேர்ச்சி பெற வையுங்கள் - ரூ.500 உடன் 10ஆம் வகுப்பு மாணவர்கள் கோரிக்கை
நாடு முழுவதும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்தது.
இதற்கான விடைத்தாளை திருத்தும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விடைத்தாளுடன் ரூ.500
மாணவர்கள் சிலர் விடைத்தாளுடன், ரூ.500 வைத்து தேர்ச்சியடைய வைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது, ஆசிரியர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் மாணவர் ஒருவர் ரூ.500 தாளை வைத்து, "தயவுசெய்து என்னைத் தேர்ச்சி பெறச் செய்யுங்கள்; என் காதல் உங்கள் கைகளில்தான் உள்ளது" என தெரிவித்துள்ளார்.
மற்றொரு மாணவர், "இந்த ரூ. 500 உடன் தேநீர் அருந்துங்கள், ஐயா, தயவுசெய்து என்னை தேர்ச்சி பெறச் செய்யுங்கள்" என எழுதியுள்ளார்.
மற்றொருவரோ, "என்னை தேர்ச்சி பெறச் செய்யாவிட்டால், பெற்றோர் என்னை கல்லூரிக்கு அனுப்ப மாட்டார்கள்" என்று எழுதியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |