பிரான்சில் மசூதிகள் முன் அருவருக்கத்தக்க செயல்களை செய்தவர்கள் வெளிநாடொன்றில் கைது
பிரான்சிலுள்ள 9 மசூதிகள் முன் பன்றித்தலைகள் வைக்கப்பட்டிருந்த விவகாரம் தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஒன்பது மசூதிகள்...
இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதத்தின் துவக்கத்தில், பாரீஸ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றிற்கு காலை தொழுகைக்கு வந்த சிலர், மசூதி வாசலில் ஒரு அதிரவைக்கும் காட்சியைக் கண்டார்கள்.
ஆம், இரத்தம் சொட்டச் சொட்ட காணப்பட்ட பன்றி ஒன்றின் தலை மசூதி வாசலில் வைக்கப்பட்டிருந்தது. அதன் மேல், நீல எழுத்துக்களில் ‘ மேக்ரான்’ என எழுதப்பட்டிருந்தது.
அந்த மசூதியின் நிர்வாகியான Najat Benaliக்கு தகவல் செல்ல, அவர் அங்கு விரைய, சிறிது நேரத்துக்குள், அங்கு மட்டுமல்ல, பிரான்சிலுள்ள ஒன்பது மசூதிகளின் முன் இதே விரும்பத்தகாத விடயம் நடந்துள்ளது தெரியவந்தது.
CCTV காட்சிகளால் கண்டுபிடிக்கப்பட்ட விடயம்
உடனடியாக பொலிசார் தீவிர விசாரணையில் இறங்க, பல்வேறு இடங்களில் உள்ள CCTV கமெராக்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
கமெராக்களில் பதிவான காட்சிகள், செர்பியா நாட்டு லைசன்ஸ் பிளேட் கொண்ட ஒரு காரில் பயணிக்கும் இரண்டுபேர், மசூதிகள் முன் பன்றித்தலைகளை போட்டுவிட்டு, அதை புகைப்படமும் எடுத்துக் கொள்வதைக் காட்டின.
11 பேர் கைது
இந்த சம்பவங்கள், பிரான்சில் வெறுப்பையும் பாரபட்சம் நிலவும் எண்ணத்தையும் தூண்டி, வன்முறையை உருவாக்கி, மக்களுடைய அமைதியைக் குலைப்பதற்காக வெளிநாடொன்று மேற்கொண்டுவரும் சதி என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில், செர்பியா நாட்டின் தலைநகரான Belgrade மற்றும் அந்நாட்டிலுள்ள Velika Plana ஆகிய நகரங்களில், இந்த சம்பவம் தொடர்பாக 11 பேரை செர்பிய பொலிசார் கைது செய்துள்ளதாக செர்பிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
12ஆவது நபர் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவர், வெளிநாடொன்றின் உத்தரவின்பேரில் இந்த குழுவினருக்கு பயிற்சி அளித்தவர் என கருதப்படுவதாக செர்பிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |