மணிப்பூரில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் உயிரிழப்பு: 180 பேர் மருத்துவமனையில் அனுமதி
11 dead who have consume Toxic Liquor in Manipur: மணிப்பூரில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் வட கிழக்கு மாகாணம் மணிப்பூரில் நச்சுத்தன்மை கொண்ட கள்ளச்சாராயத்தை அருந்தியதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மேலும் கள்ளச்சாராயத்தை அருந்தியதாக சந்தேகிக்கப்படும் 180 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் அடையாளம் தெரியாத இடங்களில் மது அருந்துவதை தவிர்க்குமாறு துணை காவல் ஆணையர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் Yumnam Khemchand Singh வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், இதுவரை 180 க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயத்தினால் பாதிக்கப்பட்டு 2 மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என உறுதிப்படுத்தியுள்ளார்.