வங்கக்கடலில் உருவாகப்போகும் புயல்.., 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்
தமிழகத்தில் இன்று சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.
இன்று செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கையும், சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று மதியம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இது அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில், வடதமிழகம், புதுவை, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது புயலாக மாற வாய்ப்புள்ளதா என்பது இன்று தான் தெரியும் என்று வானிலை மைய தென்மண்டலத் தலைவர் தெரிவித்துள்ளார்.
காற்றழுத்தம் காரணமாக, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்யும்.
அதேபோல் சேலம், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |