பிரித்தானியாவில் இந்த 11 மில்லியன் மக்களுக்கும் ஏன் வேலை கிடைக்கவில்லை... வெளியான காரணம்
பிரித்தானியாவில் தற்போது 11 மில்லியன் மக்கள் வேலை இல்லாமல் உள்ளனர். ஆனால் இவர்கள் வேலையில்லாதவர்களாகக் கருதப்படுவதில்லை.
வேலை தேட முடியவில்லை
பிரித்தானியாவில் தற்போது 11 மில்லியன் மக்கள் வேலையில்லாமல் இருந்தாலும், அவர்கள் பொருளாதார ரீதியாக செயலில் இல்லாதவர்கள் என்றே கருதப்படுகிறார்கள்.
அதாவது நோய் காரணமாக வேலை செய்ய முடியவில்லை, குடும்ப உறுப்பினர்களை கவனித்துக் கொள்வதால் வேலைக்கு செல்ல முடியவில்லை அல்லது குடும்ப சூழல் காரணமாக வேலை தேட முடியவில்லை என்பவர்களே இந்த 11 மில்லியன் மக்கள் என தெரிய வந்துள்ளது.
2012க்கு பிறகு இந்த நிலையில் இருக்கும் மக்களின் எண்ணிக்கையானது 2023 டிசம்பரில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. மக்களை வேலைக்கு திரும்பும் நிலைக்கு கொண்டுவர,
உளவியல் பாதிப்பு காரணமாக சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளை நேரில் சென்று சந்தித்து வேலைப் பயிற்சியாளர்களால் மீண்டும் வேலைக்குச் செல்ல உதவலாம் என்ற திட்டம் அரசு சார்பில் முன்வைக்கப்பட்டது.
ஆனால் முன்வைக்கப்பட்ட இரண்டு திட்டத்திற்கும் ஒருவகையில் எதிர்ப்பு கிளம்பியது. மருத்துவமனையை வேலை வாய்ப்புக்கு தயார் படுத்தும் மையமாக மாற்றுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
தயார் நிலையில் இருப்பவர்கள்
மேலும், இந்த 11 மில்லியன் மக்களில் சுமார் 1.7 மில்லியன் பேர்கள் வேலைக்கு செல்ல தயார் நிலையில் இருப்பவர்கள், ஆனால் போதிய ஊதியம் கிடைப்பதில்லை என்பதால், வேலைக்கு செல்ல மறுப்பவர்கள்.
வேலையில்லாமல் இருக்கும் உளவியல் பாதிப்பு கொண்ட பலர் வேலை செய்ய விரும்புகிறார்கள், இதில் 58 சதவிகிதம் பேர்கள் ஊதியம் பெறும் வேலையை விரும்புவதாகக் கூறுகிறார்கள்.
2024ல் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், 10ல் 3 (30%) பணியாளர்கள் கடந்த ஆண்டில் தங்களின் மன நலனில் சரிவைக் கண்டுள்ளனர். மன அழுத்தம் மற்றும் பொருளாதார ரீதியான கவலைகள் மனநலம் மோசமடைவதற்கு குறிப்பிடத்தக்க காரணிகளாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |