தமிழ்நாடு முழுவதும் இனி 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது- கல்வி அமைச்சர்
தமிழ்நாடு முழுவதும் இந்தாண்டு முதலே 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும்-என கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து
திமுக அரசு பொறுப்பேற்ற பின் தமிழ்நாட்டிற்கென மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க குழு அமைக்கப்படும் என 2021-22ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்து.
அதன்படி, ஓய்வுபெற்ற 2022ஆம் ஆண்டு நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது.
அக்குழு, மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்கான பரிந்துரைகளை அரசிடம் கடந்த ஆண்டு சமர்ப்பித்தது.
இந்நிலையில், தமிழகத்திற்க்கான மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
மாநில கல்விக் கொள்கையை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இதில் 11ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும் 10 மற்றும் 12 வகுப்பிற்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
8ஆம் வகுப்பு தடையற்ற கல்வி என்பதை உறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே வைத்து தேர்ச்சியை முடிவு செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |