வெளிநாட்டில் வசிக்கும் 11 வயது தமிழ் சிறுவன் படைத்த மாபெரும் சாதனை! குவியும் வாழ்த்துக்கள்
அவுஸ்திரேலியாவில் 11 வயது சிறுவன் ஒருவர் Drums வாத்தியத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள Sydney பகுதியில் வசித்து வருபவர்கள் ராஜேஷ் குமார்-ஆர்த்தி தம்பதி. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர்களுக்கு 11 வயதில் பிரிதீஷ் என்ற மகன் உள்ளார்.
சிறு வயதில் இருந்தே இவருக்கு ட்ரம்ஸ் இசைக்கருவியை இசைப்பதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. அவரது பெற்றோரும் சிறுவனுக்கு பக்கப்பலமாக இருந்து ஊக்கம் அளித்தனர்.
இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு drums வாத்தியம் பற்றி Trinity College of London-னில் முறையாக கற்று பிரதீஷ் இசைக்கலைஞராக உருவாகினார். அந்த வகையில் ட்ரம்ஸ் வாத்தியத்தில் ஒரு நிமிடத்தில் 2,370 முறை drumbeats-ஐ வாசித்ததன் மூலம் கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் ஒரு நிமிடத்தில் 2109 drumbeats பதிவு செய்யப்பட்டதை முறியடித்து சாதனை படைத்துள்ளது தமிழகத்துக்கு பெருமையை சேர்த்துள்ளது.
இந்த சாதனையை அடுத்து தமிழ் சிறுவனுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றது. அந்த சிறுவன் ட்ரம்ஸ் வாசிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.