பிரித்தானியாவில் நேற்றிரவு காணாமல் 11 வயது சிறுவன்! புகைப்படத்தை வெளியிட்டு மக்கள் உதவியை நாடும் பொலிஸ்
பிரித்தானியாவில் வடக்கு யார்க்ஷைரில் உள்ள மிடில்ஸ்பரோ பகுதியில் 11 வயது சிறுவன் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளார்.
ஜான் கோனர்ஸ் (John Connors) என்கிற அந்த சிறுவன் கடைசியாக மிடில்ஸ்பரோவில் Elkington Walk/Burwell Road பகுதியில் ஏப்ரல் 7-ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணியளவில் காணப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை கிளீவ்லேண்ட் காவல்துறை காணாமல் போன ஜான் கோனர்ஸின் புகைப்படத்தை வெளியிட்டு, அவரை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளது.
காணாமல் போன நேரத்தில், ஜான் கோனர்ஸ் கருப்பு நைக் டிராக்சூட் பாட்டம்ஸ், ஒரு ஜம்பர் மற்றும் கருப்பு மற்றும் ஆரஞ்சு நைக் ட்ரெயினர் ஷூ அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜான் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளை, இரண்டு நாட்களாக எடுத்துக் கொள்ளாமல் ஆபத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பார்க் எண்ட், பாலிஸ்டர் பார்க், நார்த் ஆர்ம்ஸ்பி மற்றும் பெர்விக் ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் கோனர்ஸ் காணப்பட்டதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அவர் இருக்கும் இடம் குறித்த தகவல் உள்ள எவரும் கிளீவ்லேண்ட் போலீஸை 101 மேற்கோள் 072999 ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஏப்ரல் 30-ஆம் திகதி முதல் மே 7-ஆம் திகதி வரை கடந்த ஒரு வாரத்தில் பல குழந்தை கடத்தல் முயற்சிகள் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைட்மோர் சாலையில் ஏப்ரல் 30-ஆம் திகதி, பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சி 'Line of Duty' நடிகை Sherise Blackman-ன் 11 வயது மகனை, கருப்பு நிற வேனில் வந்த ஒருவர் லிப்ட் கொடுப்பதாக அழைத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதே நாளில், கேஸிலே பார்க் பகுதியில் 8 வயது சிறுவனிடம் அதே போன்ற அணுகுமுறை இருந்துள்ளது.
அதே போல், மே 5-ஆம் திகதி ஒரு சிறுவனை அடையாளம் தெரியாத நபர் பின்தொடர்ந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மற்றும் மே 7-ஆம் திகதி ப்ரோம்லியில் உள்ள க்ளாட்ஸ் ஷாப்பிங் சென்டரில் ஒரு சிறுமி கடத்தப்பட்ட முயற்சிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜான் கோனர்ஸ் (11) காணாமல் போயுள்ளது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.