வாய்தகராறில் 11 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட நபர்! பறிபோன உயிர்..லாஸ் வேகாஸில் அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் 11 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
11 வயது சிறுவன்
லாஸ் வேகாஸின் புறநகர்ப் பகுதியில் 11 வயது சிறுவன், தனது மாற்றாந்தந்தையுடன் பாடசாலைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது டைலர் மேத்யூ ஜோன்ஸ் என்ற 22 வயது இளைஞர், குறித்த சிறுவனின் காரை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.
இதனால் இரு கார்களுக்கும் இடையே முந்திச் செல்ல மோதல் உருவாகியுள்ளது. அதன் காரணமாக நெரிசலான நெடுஞ்சாலையில் வாக்குவாதம் முற்றியதாக கூறப்படுகிறது.
உயிரிழப்பு
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஜோன்ஸ் ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து, சிறுவன் இருந்த காரின் பின் இருக்கையில் சுட்டுள்ளார். 
இதில் அமர்ந்திருந்த சிறுவன் மீது குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக தீயணைப்பு துறையினரால் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் தெற்கு நெவாடா பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து ஜோன்ஸ் குற்றம் நடந்த இடத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரது துப்பாக்கியும் மீட்கப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |