மெல்போர்னில் பயங்கர கார் விபத்து! 11 வயது சிறுமி குறித்த துயரமான செய்தி
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலத்த காயமடைந்த சிறுமி உயிரிழந்தார்.
சிறுமி பரிதாப மரணம்
மெல்போர்னின் கிழக்கில் உள்ள வான்டிர்னா தெற்கின் சந்திப்பில் இரண்டு கார்கள் மோதிக்கொண்டன.
இந்த பயங்கர விபத்தில் 11 வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்தார். 
உடனடியாக அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு குறித்த சிறுமி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றொரு காரில் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மீட்கப்பட்ட 4 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
38 வயது பெண்
அதேபோல் கொரோல்லா காரினை ஓட்டி வந்த 38 வயது பெண் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு வாகனங்களும் எவ்வாறு மோதிக்கொண்டன என்பது குறித்து புலனாய்வு பிரிவு துப்பறியும் நபர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த ஆண்டில் மட்டும் 239 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |