Down's Syndrome நோயால் பாதிக்கப்பட்ட 11வயது சிறுமி: பள்ளிக்கு கை பிடித்து அழைத்து சென்ற பிரதமர்!
Down's Syndrome நோயினால் பாதிக்கப்பட்ட எம்ப்ளா அடெமி (11) என்ற சிறுமியை பள்ளிக்கு அழைத்து சென்று North Macedonia's பிரதமர் ஸ்டெவோ பென்டாரோவ்ஸ்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
North Macedonia நாட்டில் கோஷ்டிவர் பகுதி சேர்ந்த எம்ப்ளா என்ற Down's Syndrome நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது சக மாணவர்களிடம் அச்சுறுத்தும் விதமாக நடந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து சக மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் பள்ளி நிர்வாகம் எம்ப்ளாவை ஒரு சிறிய குளிர்ந்த அறையில் தனியாக அமரவைத்துள்ளனர்.
பிறகு எம்ப்ளாவின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து அவரை மீண்டும் சக மாணவர்களுடன் அமர பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எம்ப்ளாவின் சக வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வராமல் வகுப்புகளை புறக்கணித்துள்ளனர். இந்த நிலையில் பிப்ரவரி 1ம் திகதி பள்ளிக்கு சென்ற எம்ப்ளா வகுப்பறையில் யாரும் இல்லாமல் தனியாக அமர்ந்துள்ளார்.
இந்த வேதனையான செய்தியை கேட்ட North Macedoniaவின் பிரதமர் ஸ்டெவோ பென்டாரோவ்ஸ்கி எம்ப்ளாவை அவரே பள்ளிக்கு அழைத்து சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். மேலும் இந்த நோய்யால், எம்ப்ளா மற்றும் அவரது பெற்றோர் தினமும் சந்திக்கும் துயரங்களை எம்ப்ளாவின் பெற்றோரிடம் கேட்டறிந்தார்.
அத்துடன் எம்ப்ளாவின் சக மாணவர்களுடைய பெற்றோர்களின் இந்த செயல் வருத்தம் அளிப்பதாகவும், குழந்தைகளின் சுகந்திரத்தில் பெற்றோர்களின் இது போன்ற நிகழ்வுகள், அவர்களின் கல்வியில் முட்டுக்கட்டை போடுவதாகவும், அதுவும் இதுபோன்ற குறைபாடு உள்ள குழந்தை வாழ்வை முற்றிலுமாக சிதைத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய குறைபாடு உள்ள குழந்தைகளை சக மாணவர்கள் எந்த ஒரு வேறுபாடுகளும் இன்றி சகோதரத்துடன் நடத்துவது அந்த குறைபாடு உள்ள குழந்தைகளையும் மகிழ்ச்சி ஊட்டவும், உத்வேகம் அளிக்கவும் செய்யும் என தெரிவித்துள்ளார்.
மேலும் வகுப்பறையில் அனைவரும் வரும் சமம் என்பதை அனைத்து பெற்றோர்களும் உணரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் North Macedoniaவின் பிரதமர் ஸ்டெவோ பென்டாரோவ்ஸ்கி எம்ப்ளாவின் கரம் பிடித்து பள்ளிக்கு அழைத்து சென்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.