110 கோடி பரிசு... லொட்டரியால் நீதிமன்றம் சென்றுள்ள காதலர்கள்
கனடாவில், லொட்டரியில் விழுந்த பரிசு காரணமாக ஒரு ஜோடி நீதிமன்றம் சென்றுள்ளது.
110 கோடி பரிசு...
கனடாவின் மனித்தோபாவைச் சேர்ந்த கிறிஸ்டல் மெக்கே (Krystal McKay) என்னும் பெண்ணுக்கு, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம், லொட்டயில் 5 மில்லியன் கனேடிய டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.
இலங்கை மதிப்பில் அது சுமார் 110 கோடி ரூபாய் ஆகும்.
இந்நிலையில், கிறிஸ்டலின் முன்னாள் காதலரான லாரன்ஸ் கேம்பல் (Lawrence Campbell), அது தான் வாங்கிய லொட்டரிச்சீட்டு என்றும், அந்த பரிசுத்தொகை முழுவதும் தனக்குத்தான் சொந்தம் என்றும் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த லொட்டரிச்சீட்டில் பரிசு விழுந்தபோது, தனக்கு நிரந்தர அடையாள அட்டையோ வங்கிக்கணக்கோ இல்லாததால், அந்த பரிசை தனக்காக பெற்றுக்கொள்ளுமாறு தான் கிறிஸ்டலைக் கேட்டுக்கொண்டதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால், தானும் லாரன்சும் சேர்ந்து காரில் பயணிக்கும்போது, காரை நிறுத்தச் சொல்லி, தான் அந்த லொட்டரிச்சீட்டை வாங்கியதாக தெரிவித்துள்ள கிறிஸ்டல், பரிசு விழுந்தபோது கூட, அதை தான் கையெழுத்திட்டு வாங்கிக்கொள்ளும்போது லாரன்ஸ் பரிசுத்தொகை குறித்து எந்த விவாதமும் முன்வைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பரிசு விழுந்தபின் கிறிஸ்டல் தன் மொபைல் அழைப்புகளை ஏற்கவில்லை என்று லாரன்ஸ் கூற, கிறிஸ்டலோ, பரிசு விழும் முன்பே, அதாவது, 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே, தான் லாரன்சை பிரிய விரும்புவதாக அவரிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |