பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை
£111M EuroMillions Jackpot UK Ticket Holder Claims: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் அதிர்ஷ்டசாலி ஒருவர் £111 மில்லியன் பரிசு தொகையை வென்று அசத்தியுள்ளார்.
£111 மில்லியன் ஜாக்பாட்
வெள்ளிக்கிழமை நடந்த யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட் குலுக்கலில் பிரித்தானியாவை சேர்ந்த அதிர்ஷ்டசாலி ஒருவர் £111 மில்லியன் பரிசு தொகையை வென்றுள்ளார்.
இந்த லொட்டரி வெற்றியின் மூலம், இந்த ஆண்டின் மூன்றாவது பெரிய லொட்டரி பரிசை பிரித்தானியா வென்றுள்ளது.
£111 மில்லியன் பரிசு தொகையின் வெற்றி குலுக்கலின் முக்கிய எண்கள் 11,12, 15, 38, 49 மற்றும் அதிர்ஷ்ட நட்சத்திர எண்கள் 10, 12 ஆகும்.

யூரோ மில்லியன் ஜாக்பாட்டில் £111 மில்லியன் பரிசு தொகையை என்பது மிகப்பெரிய பரிசாக இருந்தாலும், உலகளவில் இதைவிட மிகப்பெரிய சாதனைகள் உள்ளது.
யூரோ மில்லியன்ஸ் லொட்டரியில் அதிகபட்ச பரிசு தொகையாக €250 மில்லியன் (£215 மில்லியன்) இதுவரை 3 முறை வெல்லப்பட்டுள்ளது.
பிரான்ஸ், அயர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் இந்த பிரம்மாண்ட யூரோமில்லியன்ஸ் பரிசு தொகையை வென்றது குறிப்பிடத்தக்கது.