இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் 116 பகுதிகள்: எச்சரிக்கை தகவல்
இங்கிலாந்தில் 116 பகுதிகளில் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரித்து வருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானியாவில் ஒரே மாதத்தில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை 80 சதவீதம் அளவுக்கு சரிவடைந்துள்ளதாக நம்பிக்கை அளிக்கும் தகவல் வெளியாகிய்யுள்ளது.
இருப்பினும், இங்கிலாந்தில் ஒன்பது பகுதிகளில் தொற்று அளவு மாறாமல் உள்ளது எனவும் தெரிய வந்துள்ளது. நேற்று ஒருநாள் மட்டும் 141 பேர்கள் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். புதிதாக 5,758 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நான்கு வாரங்களுக்கு முன்னர் இந்த எண்ணிக்கை 12,718 என இருந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் கொரோனா பரவல் தொடங்கிய நாளில் இருந்து பிரித்தானியாவில் 4,274,579 பேர்களுக்கு கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிகிச்சை பலனின்றி இதுவரை 125,831 பேர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் இங்கிலாந்தில் 116 பகுதிகளில் கொரோனா பரவல் நீடிப்பதாகவே ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும், இதில் 5 பகுதிகள் அதிக கவனம் தேவைப்படும் பகுதிகள் எனவும் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, பிரித்தானியாவில் மொத்தம் 25.2 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும்,
1.7 மில்லியன் மக்கள் தங்களின் இரண்டாவது டோஸ் தடுப்பு மருந்தும் பெற்றுக்கொண்டுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றன.