கொரோனாவிலிருந்து உயிர் பிழைத்த 117 வயது அதிர்ஷ்டசாலி பிரான்ஸ் பெண்!
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 117 வயதான கன்னியாஸ்திரி ஒருவர் கொரோனாவிலிருந்து உயிர் பிழைத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவின் மிக வயதான நபர் என்ற பெருமையுடன் வாழ்ந்துவரும் லூசில் ராண்டன், வரும் வியாழனன்று (பிப்ரவரி 11) தனது 117வைத்து பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.
இந்த பிறந்தநாள் அவருக்கு மேலும் சிறப்பான அதிர்ஷ்டவசமான ஒன்றாக அமைந்துள்ளது. காரணம், அவர் கடந்த வாரத்தில் மிகப்பெரிய கண்டத்திலிருந்து தப்பித்துள்ளார்.
1944ல் சகோதரி ஆண்ட்ரே என்ற பெயரைப் பெற்ற கன்னியாஸ்திரியான லூசில் ராண்டன், கடந்த ஜனவரி 16-ஆம் திகதி அன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஆனால் அவரும் எந்த அறிகுறியும் இல்லாமல், தெற்கு பிரான்சின் டூலோனில் தனது ஓய்வூதிய இல்லத்தில் எப்போதும்போல இருந்துவந்துள்ளார்.
பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததும், அனைவரிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், அவர் கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலுமாக குணமாகியுள்ளார்.
சகோதரி ஆண்ட்ரே பிப்ரவரி 11, 1904-ல் பிறந்தார். ஐரோப்பாவின் மிகப் வயதான நபராகவும், உலகில் தற்போது வாழ்ந்துவரும் இரண்டாவது வயதான நபராகவும் உள்ளார்.