இலங்கையில் ஓர் ஆண்டில் மட்டும் நடந்த விபத்துகள்! அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்
இலங்கையில் சாலை விபத்துகளில் மட்டும் கடந்த 6 மாதங்களில், கிட்டத்தட்ட 1200 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அச்சத்தை உண்டாக்கும் சாலை விபத்துக்கள்
இந்த ஆண்டு இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் 1,192 பேர் சாலை விபத்துகளில் பலியாகியுள்ளனர்.
இந்த விவரத்தை தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட அத்தியட்சகர் நிஹால் தல்துவா, சூலை 9ஆம் திகதி வரையான காலகட்டத்தில் இவர்கள் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
விபத்திற்கான காரணம்
இதற்கு காரணம் மேற்கத்திய நாடுகள் போல இறுக்கமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் இலங்கையில் இல்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல் சாலை விதிகளை பெரும்பாலும் மக்கள் கடைபிடிப்பது இல்லை என்றும், அதிவேக வாகன இயக்கம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது என பல காரணங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இவ்வாறான பல விபத்துக்கள் நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |