11th WTBT 2026 LONDON- வெற்றிகரமாக நடந்த அ்றிமுக நிகழ்வு
“11th WTBT 2026 LONDON “ உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின்” உலகக் கிண்ணச் செய்திக்கான நிகழ்வு நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்வை WTBF நிறுவனர் திரு. கந்தையா சிங்கம் தலைமைதாங்கி நடத்தினார். இவர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு சுவிட்சர்லாந்திலிருந்து வருகை தந்திருந்தார்.
இந்த அறிவிப்பு, ஹேரோவில் ( Harrow) நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது வெளியிடப்பட்டது. இதில் மாநகர தமிழ் ஊடகத்தினருக்கு புதிய போட்டி ஒருங்கிணைப்புக் குழுவை அறிமுகப்படுத்தினார்.
லண்டன், இங்கிலாந்து உலகத் தமிழர் பூப்பந்தா ட்டப் பேரவை (WTBF) பெருமிதத்துடன் அறிவிக்கிறது. 11வது ஆண்டு உலகக் கிண்ணப் போட்டி இங்கிலாந்தின் லண்டனில் 2026 ஏப்ரல் 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெற இருக்கிறது.
திரு. கந்தையா சிங்கம் அவர்கள் தனது உரையில் WTBF இன் வரலாறு மற்றும் வளர்ச்சியைப் பற்றிய சுருக்கமான விளக்கத்தையும் வழங்கினார்.
அவர் குறிப்பிட்டது போல, 2025 ஆம் ஆண்டின் 10வது ஆண்டு உலகக் கிண்ணப் போட்டி பிரான்ஸில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் 275க்கும் மேற்பட்ட விளையாட்டாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் 11 வயதுக்குட்பட்டவர்களிலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை பங்கேற்றனர்.
பிரித்தானியா , ஜெர்மனி, கொலண்ட், கனடா, சுவீடன், பிரான்ஸ், டென்மார்க், அமெரிக்கா, நோர்வே, சுவிட்சர்லாந்து, ஜப்பான், இந்தியா, மலேசியா, அயர்லாந்து மற்றும் இலங்கை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள் போட்டியில் பங்கேற்றன. பிரத்தியேகமாக பிரான்ஸ் போட்டியில் தமிழர் அல்லாதவர்களுக்கான தனிப் பிரிவும் நடத்தப்பட்டது.
WTBF என்பது சுவிட்சர்லாந்தில் 2013 ஏப்ரலில் நிறுவப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பாகும். அதன் முதற்குழு பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த வீரர்களை இணைத்து முதல் நிர்வாக கட்டமைப்பு திரு கந்தையா சிங்கம் அவர்களால் உருவாக்கப்பட்டது. தற்போது ஜெர்மனி, கொலண்ட், ஸ்வீடன், டென்மார்க், நோர்வே, இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக வளர்ந்துள்ளது.
இந்நிகழ்வில் “11th WTBT 2026 LONDON “ போட்டிக்கான இங்கிலாந்து ஒருங்கிணைப்புக் குழு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த குழு போட்டியின் திட்டமிடல் மற்றும் செயல்பாட்டை ஒருங்கிணைக்கும்.
குழு உறுப்பினர்கள் பின்வருமாறு: திரு. தர்மரத்தினம் ரகுராஜ், திரு. திரு சுகுமார், திரு. மஹேன் பாக்கியரத்தினம், திரு. அரசரத்தினம் கார்த்திக், திரு. திருமாறன் பாலா, திரு. சேனதிராஜா தனஞ்செயன், திரு. பிலிப் கான்ஸ்டன்டைன் (சுரேஸ்), திரு. குருபரன் சுந்தர், திரு. கந்தையா சிங்கம், திரு. கதிர்வேல் ஜெகதரன் இந்த அமைப்பின் நோக்கம் விளையாட்டைத் தாண்டி, தமிழ் கலாச்சாரம், தலைமுறைகள் இடையிலான இணைப்பு, உறவுமிகுந்த சமூகத்தை உருவாக்குவதே ஆகும்.
இறகுப்பந்து விளையாட்டின் மூலம் இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இது உலகளாவிய தமிழர்களை ஒருமித்து கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
திரு. கந்தையா சிங்கம் தனது உரையை முடிக்கும்போது, அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார் மற்றும் 2026 லண்டன் போட்டி வெற்றிகரமாக நடைபெற அனைவரின் முழு ஒத்துழைப்பையும் வேண்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |