மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டுமா? அப்போ இந்த 12 உணவுகளை சாப்பிடுங்கள்
மரபணு மாற்றங்களால் கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சி ஏற்படும்பொழுது, அது மார்பகப் புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.
ஹார்மோன் தாக்கங்கள், மரபணு, சுற்றுச்சூழல், மது அருந்துதல் , புகைபிடித்தல் உள்ளிட்ட ஆரோக்கியமற்ற தேர்வுகளின் விளைவுகளால் இந்த புற்றுநோய் உண்டாகிறது.
மார்பக புற்றுநோயை தடுக்க இந்த 12 உணவுகளை சாப்பிட்டால் போதுமானது.
கீரை வகைகள்
பச்சை கீரைகளில் பீட்டா கரோட்டின், லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் உள்ளிட்ட கரோட்டினாய்டு ஆண்டி-ஆக்ஸிடண்டுகள் உள்ளன.
இதில் இருக்கும் அதிக ரத்த உற்பத்தி அளவு மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது என பல ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
காய்கறிகள்
காலிஃபிளவர், முட்டைக்கோஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளில் குளுக்கோசினோலேட் சேர்மங்கள் உள்ளன.
இந்த வகை காய்கறிகள் மார்பக புற்றுநோய்க்கான அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
coyau
அல்லியம் வகை காய்கறிகள்
பூண்டு, வெங்காயம் போன்ற அல்லியம் வகை காய்கறிகளில் உள்ள ஆர்கனோசல்பர் கலவைகள், ஃபிளாவனாய்டு ஆண்டி-ஆக்ஸிடண்டுகள், வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இந்த சக்திவாய்ந்த ஈட்டச்சத்துக்கள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற பழங்களில் வைட்டமின்-சி, கரோட்டினாய்ட்ஸ், ஃபிளாவனாய்ட்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
இது உடலில் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரித்து புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை வளர்க்கிறது.
பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்களில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடண்டுகள், ஃபிளாவனாய்ட்ஸ் மற்றும் ஆந்தோசயினின்கள் உடலில் உள்ள திசுக்களின் சிதைப்பைத் தடுக்கிறது.
மேலும், இவை உடலில் புற்றுநோய் செல்கள் பரவுவதை குறைக்கிறது.
Getty Images
பழங்கள்
பீச், ஆப்பிள்கள், பேரீச்சம்பழம் மற்றும் திராட்சை ஆகிய பழங்கள் புற்றுநோய் எதிர்ப்பு ஆற்றலை வலுவாகப் பெற்றுள்ளன.
istock
மீன்
மீன்களில் உள்ள சால்மன், சார்டைன்ஸ், மேக்ரீல் போன்றவை உடல் நலத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன.
மேலும் இதில் அதிகளவில் ஒமேகா-3 அமிலம், செலீனியம், ஆண்டி-ஆக்ஸிடண்ட்ஸ் போன்றவை இருப்பதால் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைஅளிக்கிறது.
புளிக்கவைத்த உணவுகள்
தயிர், யோகர்ட் போன்றவை அதிகளவு ப்ரோ-பயாடிக்ஸை கொண்டுள்ளன. இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது.
Shutterstock
பீன்ஸ்
பீன்ஸ்களில் ஃபைபர், வைட்டமின், மினரல்ஸ் போன்றவை இருக்கின்றன.
இது புற்றுநோய் செல்கள் வளர்வதை 28 விழுக்காடு வரை தடுக்கின்றன.
GETTY IMAGES
மூலிகை மசாலாக்கள்
இதில் அதிகளவு வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள், பாலிஃபினால் ஆண்டி-ஆக்ஸிடண்டுகள் உள்ளன.
இவை மார்பக புற்றுநோய் உயிரணுக்களுக்கு எதிரான விளைவுகளை வெளிப்படுத்துகின்றன.
தானியங்கள்
கோதுமை, அரிசி, பார்லி, கம்பு போன்ற தானிய வகைகளில் அதிகளவு நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன .
இவற்றில் சக்திவாய்ந்த புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள் உள்ளன.
வால்நட்ஸ்
வாழ்நட்ஸில் ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் நிறைந்துள்ளது. இவை புற்றுநோய் எதிர்ப்பு உணவாக செயல்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |