இஸ்ரேல் மீதான தாக்குதலில் 12 பிரான்ஸ் நாட்டவர்கள் பலி... 17 பேர் மாயம்
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலின்போது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளார்கள். அது குறித்த விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகிவருகின்றன.
உயிரிழந்த பிரான்ஸ் நாட்டவர்கள் எத்தனை பேர்?
சனிக்கிழமை இஸ்ரேல் மீது நடந்த ஹமாஸ் தாக்குதலில் 12 பிரான்ஸ் குடிமக்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 17 பேர் காணாமல் போனதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சில ஊடகங்கள், 11 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேர் காணமல் போனதாகவும் தெரிவிக்கின்றன.
இது குறித்து பேசிய பிரான்ஸ் பிரதமர் Elisabeth Borne, காணாமல் போனவர்கள், பல குழந்தைகள் உட்பட, கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
We are devastated to confirm that 12 @UNRWA colleagues have been killed since 7 October in the 📍#GazaStrip
— UNRWA (@UNRWA) October 12, 2023
We mourn this loss and are grieving with our colleagues and the families.@UN staff and civilians must be protected at all times. pic.twitter.com/bGt9GUM0zp
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |