மிதுனத்திற்கு பெயர்ச்சியாகும் புதன் பகவான்- பணமழையில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள்
ஜாதகத்தில் புதன் பகவான் கிரகங்களில் இளவரசர் என்று சொல்லப்படுகிறது. நாளை மதியம் 12.35 மணிக்கு முதல் ஜூலை 8ம் தேதி வரை புதன் பகவான் மிதுன ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இதனால், பணமழை கொட்டப்போகும் அந்த ராசிக்காரர்களைப் பற்றி பார்ப்போம் -
ரிஷபம்
புதன் பகவான் மிதுன ராசியில் சஞ்சரிப்பதால், ரிஷப ராசிக்கார்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கப்போகிறது. சக ஊரியர்களின் ஒத்துழைப்பும், பாராட்டும் கிடைக்கும். தொட்டதெல்லாம் துலங்கும்.
சிம்மம்
புதன் பகவான் மிதுன ராசியில் சஞ்சரிப்பதால், சிம்மராசிக்காரர்களே உங்கள் பொருளாதார நிலை மேம்பட உள்ளது. தொழிலில் வருமானம் அதிகரிக்கும். எந்த துறையில் முதலீடு செய்தாலும் கைக்கு மேல் பலன் கிடைக்கும். புதிய வேலைகள் தேடி வரும்.
கன்னி
புதன் பகவான் மிதுன ராசியில் சஞ்சரிப்பதால், கன்னி ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் தொழில் மேம்படும். பிரச்சினைகள் இருந்தாலும் அனைத்து தீர்வுகளும் உங்களுக்கு நல்ல சாதகமாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். வேலை வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
துலாம்
புதன் பகவான் மிதுன ராசியில் சஞ்சரிப்பதால், துலாம் ராசிக்காரர்களே பல வெற்றிகளை உங்களை தேடி வரப்போகிறது. உங்களுடைய காதல் திருமணத்தில் முடிய உள்ளது. வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்
புதன் பகவான் மிதுன ராசியில் சஞ்சரிப்பதால், மிதுன ராசிக்காரர்களே அனுகூலமான நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். எந்த துறையாக இருந்தாலும் சாதனை செய்வீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 14 நாட்களில் நீங்கள் நினைத்த நிறைய வெற்றிகளை பெற இருக்கிறீர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |