சித்திரை நட்சத்திரத்தில் மாறப்போகும் கேது பகவான்: பேராபத்து ஏற்படக்கூடிய ராசிக்காரர்கள்
வரும் ஜூன் 26ம் தேதி கேது பகவான் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளதால். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் ஆபத்தும், பிரச்சினையும் ஏற்படப்போகிறது என்று பார்ப்போம்.
மிதுனம்
வரும் ஜூன் 26ம் தேதி கேது பகவான் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், மிதுன ராசிக்காரர்களே நீங்கள் நிறைய பிரச்சினைகளை சந்திக்கப்போகிறீர்கள். உங்களது காதல் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படும். பிள்ளைகளால் நிறைய பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைகுலைந்து காணப்படும்.
கடகம்
வரும் ஜூன் 26ம் தேதி கேது பகவான் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், கடக ராசிக்காரர்களே ஆரோக்கியம் சார்ந்த பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் பிரச்சினைகளால் பதற்றமான சூழல் நிலவும். வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்களால் தொந்தரவு ஏற்படும்.
கன்னி
வரும் ஜூன் 26ம் தேதி கேது பகவான் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், கன்னி ராசிக்காரர்களே உங்கள் பேச்சில் கவனம் தேவை. எடுத்த காரியத்திற்கெல்லாம் அதிகளவில் கோபம் அடைவீர்கள். ஒருவரையும் உதாசினப்படுத்தி பேசவேண்டாம். குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு நீங்கள் விலகி இருக்க நேரிடும். நிதி நிலையில் பண வரவு குறையும். பணத்தை சேமித்து வைப்பது நல்லது.
மகரம்
வரும் ஜூன் 26ம் தேதி கேது பகவான் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், மகர ராசிக்காரர்களே உங்களுக்கு நிறைய சங்கடங்கள் ஏற்படும். குடும்பத்தில் தந்தையுடன் மனக்கசப்பு ஏற்படும். கருத்து மோதல் உருவாகும். கடினமாக உழைத்தால் மட்டுமே நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பல எதிர்ப்புகளை சந்திக்க நேரும். உங்களது நற்பெயர் பாதிக்கப்படலாம்.
மீனம்
வரும் ஜூன் 26ம் தேதி கேது பகவான் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், மீன ராசிக்காரர்களே, உங்களது உடல் நிலை பாதிக்கப்படும். அலட்சியம் வேண்டாம். எந்த விஷயத்தை செய்தாலும் கவனமாக இருங்கள். ஆபத்து நேரிடும். குடும்பத்தில் பிரச்சினை அதிகரிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |