பரிகாரங்கள் எடுப்பதற்கு எத்தனை சூட்சமம் இருக்கிறதுன்னு தெரியுமா? ஜோதிடர் ALP சம்பத் சுப்ரமணி
பரிகாரங்கள் எடுப்பதற்கு எத்தனை சூட்சமம் இருக்கிறது என்று ஜோதிடர் ALP சம்பத் சுப்ரமணி நேர்காணலில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம், ஜாதக கட்டப்பொருத்தம் இதையெல்லாம் பார்த்து கல்யாணம் செய்பவர்களின் வாழ்த்தை நன்றாக இல்லை. காதல் திருமணம் செய்பவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. பெற்றோர் பார்த்து வைக்கும் கல்யாணம் விவாகரத்து ஆகிறது.
இந்த திருமணத்தில் மட்டும் பார்த்தால் பிளஸ், மைனஸ் எல்லாமே கலந்துதான் இருக்கிறது. லக்னத்தை வைத்துதான் நீங்கள் ஒரு விஷயத்தை தீர்மானம் செய்ய வேண்டும். 7ம் பாகத்தை மாற்றவே முடியாது. 7ம் இடம் தான் கர்மம். உங்களுக்கு இன்பத்தை தருவதும் அதுதான்.
துக்கத்தை தருவதும் அதுதான்.
பரிகாரம் செய்தால் கல்யாணம் ஆகும் என்பதெல்லாம் கிடையாது. இந்த கோவிலுக்கு இந்த நேரத்தில் போகிறவன்தான் ஜெயிப்பான். கோவிலைத்தாண்டி இந்த பிரபஞ்சத்தில் ஒரு விஷயம் இருக்கிறது என்றால் அது என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. பரிகாரம் என்பது என்றால், சொன்னால் அப்படி நடக்க வேண்டும். அந்த நேரத்தில் அதற்குண்டான ரிசல்ட் தெரியும். அதுதான் பரிகாரம்.
பரிகாரங்கள் எடுப்பதற்கு எத்தனை சூட்சமம் கையாள வேண்டி இருக்கிறது என்று தெரியுமா? அதெல்லாம் சும்மா கிடையாது. ஜோதிடம் என்பது அறிவியல். அதை ஆராய வேண்டும். திருமணம் ஆகவில்லையா, செவ்வாய் தோஷம் இருக்கா வாழை மரத்திற்கு தாலி கட்டு. நகையை வாங்கிப்போடு, இதெல்லாம் நடக்காது.
மேலும், இது தொடர்பாக தகவல் தெரிந்து கொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள் -
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |