நிகழப்போகும் சூரிய - சனி வக்ர பெயர்ச்சி: யோகம் வரப்போகிற ராசிக்காரர்கள் இவர்கள்தான்!
ஜூன் 15ம் தேதி மிதுனத்திற்கு சூரியன் பெயர்ச்சியும், ஜூன் 17ம் தேதி சனி வக்ர பெயர்ச்சியும் நடைபெறுவதால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு யோகம் வரப்போகறது என்று பார்ப்போம் -
மேஷம்
இந்த வாரம் மிதுனத்திற்கு சூரிய-சனி வக்ர பெயர்ச்சியும் நடைபெறுவதால், மேஷ ராசிக்காரர்களே , உங்களுக்கு பல நன்மைகள் வரப்போகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பெரியோர்களின் பாராட்டு கிட்டும். குடும்ப உறவில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் இன்பமாக பயணம் மேற்கொள்வீர்கள். செலவுகளை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்
இந்த வாரம் மிதுனத்திற்கு சூரிய-சனி வக்ர பெயர்ச்சியும் நடைபெறுவதால், ரிஷப ராசிக்காரர்களே, உங்களுடைய திறமை மேம்படும். நிதி நிலைமையில் கவனம் தேவை. புதிய முதலீடுகளில் ஆலோசனை தேவை. உறவுகளுடன அனுசரித்துச் செல்லுங்கள். திருமண வரன்கள் கைக்கூடும். குடும்பத்தில் மனைவியோடு நேரம் ஒதுக்குங்கள். உடல் நலக் குறைவு ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும்.
மிதுனம்
இந்த வாரம் மிதுனத்திற்கு சூரிய-சனி வக்ர பெயர்ச்சியும் நடைபெறுவதால், மிதுன ராசிக்காரர்களே, நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி பிறக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமை நிரூபிக்கப்படும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பணிபுரிபவர்களுடான உறவு மேம்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் மனைவியுடன் நெருக்கம் ஏற்படும். அதிக செலவு ஏற்படும். அதனால், கவனம் தேவை.
கடகம்
இந்த வாரம் மிதுனத்திற்கு சூரிய-சனி வக்ர பெயர்ச்சியும் நடைபெறுவதால், கடக ராசிக்காரர்களே, செய்யும் வேலையில் கவனம் தேவை. முதலீடுகளில் பணத்தை போடுவதை தவிர்க்கவும். திடீர் பயணம் மேற்கொள்ளப்பட இருக்கும். பயணங்களால் சோர்வு ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
சிம்மம்
இந்த வாரம் மிதுனத்திற்கு சூரிய-சனி வக்ர பெயர்ச்சியும் நடைபெறுவதால், சிம்ம ராசிக்காரர்களே, வியாபாரம் சார்ந்த விஷயத்தில் நல்ல பலன் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் புதிய முயற்சி மேற்கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும். பண விஷயத்தில் கவனம் தேவை. நீங்கள் உடல் நலம் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி
இந்த வாரம் மிதுனத்திற்கு சூரிய-சனி வக்ர பெயர்ச்சியும் நடைபெறுவதால், கன்னி ராசிக்காரர்களே, உங்களுக்கு சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும். ஆனால், மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறும். பண வரவு திருப்தி பெரும். வீடு, மனை வாங்குவீர்கள். சமூகத்தில் உங்களுக்கு மரியாதை பெருகும். குடும்பத்தில் மனைவியோடு மகிழ்ச்சி இருக்கும்.