வக்ர பெயர்ச்சி அடையும் சனி பகவான் : ஆட்டிப்படைக்கப்போகும் ராசிக்காரர்கள்!
பெயர்ச்சிகளில் பயப்படக்கூடிய பெயர்ச்சி சனிப் பெயர்ச்சிதான். கடந்த ஜனவரி மாதம் கும்ப ராசியில் சனி பகவான் பெயர்ச்சியானார். தற்போது, கும்பத்திலிருந்து பின்னோக்கி நகர்ந்து 4 மாதங்களுக்கு வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
வரும் ஜூன் 17 முதல் நவம்பர் 4ம் தேதி வரை சனி பகவான் கும்பத்திலிருந்து வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால், 4 மாதங்களுக்கு ராகு மற்றும் கேது பெயர்ச்சி நிகழ உள்ளது.
வரும் அக்டோபர் 30ம் தேதி ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி செய்ய உள்ளார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான சிக்கல்களை அனுபவிக்கப்போகிறார்கள் என்று பார்ப்போம் -
கடகம்
வரும் ஜூன் 17 முதல் நவம்பர் 4ம் தேதி வரை சனி பகவான் கும்பத்திலிருந்து வக்ர பெயர்ச்சி அடைவதால், தற்போது அஷ்டம சனி கடக ராசிக்காரர்களுக்கு நடந்து வருகிறது. இதனால், ராகு, கேது பெயர்ச்சி டக ராசிக்காரர்களுக்கு சிக்கலை தர உள்ளது. இதனால் கடகராசிக்காரர்களக்கு தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு சில சங்கடங்கள் ஏற்பட உள்ளது. செலவுகள் அதிகரிக்கக்கூடும். கடன் தொல்லை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கோபம், எரிச்சல் கூடும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும். தேவையற்ற பயணத்தை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
வரும் ஜூன் 17 முதல் நவம்பர் 4ம் தேதி வரை சனி பகவான் கும்பத்திலிருந்து வக்ர பெயர்ச்சி அடைவதால், சிம்ம ராசிக்காரர்களே ஜூன் மாதம் முதல் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் ஆர்வம் இல்லாமல் இருப்பீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். மனநிம்மதி இல்லாமல் இருப்பீர்கள். சில விஷயங்களில் யோசித்து செயல்படுங்கள். ஆபத்தான வேலைகளை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்
வரும் ஜூன் 17 முதல் நவம்பர் 4ம் தேதி வரை சனி பகவான் கும்பத்திலிருந்து வக்ர பெயர்ச்சி அடைவதால், விருச்சிக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலையில் சிக்கல் ஏற்படும். வியாபாரத்தில் பணப்பிரச்சினை ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. மன உளைச்சல் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம்
வரும் ஜூன் 17 முதல் நவம்பர் 4ம் தேதி வரை சனி பகவான் கும்பத்திலிருந்து வக்ர பெயர்ச்சி அடைவதால், மீன ராசிக்காரர்களே ஏழரை சனியின் ஆரம்ப நிலையில் இருக்கிறீர்கள். இதனால், உங்களுக்கு ஜென்ம ராசியிலேயே வருகிறார். இதனால், நிதி சிக்கல் ஏற்படும். குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும். மனைவியோடு வாக்குவாதம் ஏற்படும். அமைதியற்ற சூழல் நிலவும். பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். வேலையில் கவனம் செலுத்துவது அவசியம்.