சூரிய பகவான் பெயர்ச்சி: ஆனி மாதத்தில் பணம் கொட்டப்போகும் ராசிக்காரர்கள்
நவகிரங்களில் சூரிய பகவான் தான் முதன்மையானவர். தற்போது சூரிய பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். ஆனி மாதத்தில் சூரியன் பகவான் சஞ்சரிப்பதால் எந்ததெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் நன்மை கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் -
மேஷம்
ஆனி மாதத்தில் சூரியன் பகவான் மிதுன ராசியில் சஞ்சரிப்பதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. 3ம் வீட்டில் உங்களுக்கு சூரிய பகவான் சஞ்சரிப்பதால் எல்லா நேரமும் உங்களுக்கு சாதகமாக அமையும். அதிர்ஷ்டம் தேடி வரும். பணி இடத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தில் உங்களுடைய உடன்பிறப்பால் சில ஆதரவுகள் கிடைக்கும்.
சிம்மம்
ஆனி மாதத்தில் சூரியன் பகவான் மிதுன ராசியில் சஞ்சரிப்பதால், சிம்ம ராசிக்காரர்களே உங்களுடைய அதிபதி சூரிய பகவான் தான். நீங்கள் தொட்ட அனைத்து வேலைகளும் உங்களுக்கு சாதகமாக அமையும். குறிப்பிட்ட வருமானம் கிடைக்கும். நிதிநிலை சீராக இருக்கும். சொத்து, வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த லாபம் பெருகும்.
கன்னி
ஆனி மாதத்தில் சூரியன் பகவான் மிதுன ராசியில் சஞ்சரிப்பதால், கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த மாதம் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வருமானம் பெருகும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். கடுமையான வேலை கைக்கூடும். புதிய வேலை தேடி வரும்.
மகரம்
ஆனி மாதத்தில் சூரியன் பகவான் மிதுன ராசியில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். சோம்பல் நீங்கி, சுறுசுறுப்பு உண்டாகும். வாகனம் வாங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் தேடி வரும். எடுத்த காரியம் வெற்றி பெரும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். எந்த ஒரு செயலையும் தொய்வின்றி செய்வீர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |