ராகு தோஷத்தால் உண்டாகும் நோய்கள் - விடுபட இதை செய்யுங்கள்
ஜோதிடத்தில் ராகு கிரகம் அசுப கிரகமாகும். நவகிரகங்களின் எந்த ஒரு கிரகமும் நல்ல பலனையும், கெடு பலனையும் தராது. ஆனால், கிரகங்கள் அமைந்துள்ள நிலையைப் பொறுத்து சுப கிரகமாக இருந்தாலும் அது பல நேரங்களில் அசுப பலனைத் தரக்கூடியதாக இருக்கும்.
ஆனால், ஒருவருடைய ஜாதகத்தில் ராகு சாதகமாக அமையாவிட்டால் கெடு பலன்களையும், நோய்களைத் தருவார்.
ராகு நம் ஜாதகத்தில் மோசமாக இருக்கும்பட்சத்தில் எந்தெந்த நோய்களை எதிர்கொள்ள, தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம் -
ராகு தோஷத்தால் ஏற்படும் நோய்கள்
ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கிரகம் சரியாக இல்லையென்றால், முடி உதிர ஆரம்பிக்கும். சிலருக்கு வழுக்கையாக மாறும். ஒருவருக்கு ராகு தோஷம் இருந்தால், அவரின் நகங்கள் தானாக உடைபடும். உடல் ரீதியாக, மன ரீதியாக பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
இவர்களுக்கு அல்சர், இரைப்பை சார்ந்த பிரச்சனைகள் இருக்கும். ராகு தோஷம் இருந்தால், ஒருவருக்கு மனச்சோர்வு ஏற்படும். பைத்தியம் பிடித்தால் போல் இருப்பார்கள். குடல் பிரச்சனையும் வரும். இதனால், மன அழுத்தம் அதிகமாகி நிறைய பணம் செலவழிக்க நேரிடும். சில நிதி சிக்கல்களை சந்திக்கவும் நேரிடும்.
ராகுவின் சுபயோகம் பெற
ராகு தோஷத்தால் தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வரும் நபர்கள் சரஸ்வதி தேவியையும், அனுமானையும் தொடர்ந்து வழிபாடு செய்தால் நன்மை பிறக்கும்.
ராகு தோஷத்தால் ஒருவருக்கு தலையில் முடி கொட்டினால் அவர்கள் தூங்கும் போது தலைக்கு அருகில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து தூங்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் அந்த தண்ணீரை ஒரு மரத்திற்கு ஊற்ற வேண்டும். இதை தொடர்ந்து 43 நாட்களுக்கு செய்து வரலாம்.