சனி - செவ்வாய் கிரகங்களின் பெயர்ச்சி - துன்பம் நேரிடப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா? இதோ
சனி பகவான் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைய உள்ளார். மேலும் செவ்வாய் பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார்.
இதனால், சில ராசியினருக்கு மோசமான பலன்கள் கிடைக்கப் போவதாக ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது. சனி - செவ்வாய் பெயர்ச்சியால் துன்பத்தை அனுபவிக்கப்போகும் அந்த ராசிக்காரர்கள் யார், யாரெனப் பார்ப்போம் -
கடகம்
கடக ராசிக்காரர்களே, உங்கள் ராசியில் செவ்வாய் சஞ்சரிக்க உள்ளார். இதனால், சனியின் சஷ்டாஷ்டமம் நிலையால் உங்களுக்கு பல இன்னல்கள் நேரிடும். ஆதலால் வரும் ஜூன் 30ம் தேதி வரை கொஞ்சம் கவனமுடன் இருப்பது நல்லது. பணத்தை பார்த்து செலவு செய்யுங்கள். முதலீடு செய்வதை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். உங்கள் உடல் நிலையில் சற்று பிரச்சினை ஏற்படும். உணவில் கவனம் தேவை.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் ராசியில் சனி செவ்வாய் கிரகங்களின் சஷ்டாஷ்டமம் அமையப்போகிறது. இதனால், நீங்கள் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பல பிரச்சினைகள் ஏற்படலாம். சிக்கல்களும் நேரிடும். பொருளாதார தேவைகள் அதிகரிக்கும். செலவுகள் தேடி வரும். ஆதலால் நிதி விஷயங்களில் கவனமுடன் கையாளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே உங்கள் ராசியல் சனியும் செவ்வாயின் சஷ்டாஷ்டமம் அமைய உள்ளது. இதனால் பல நெருக்கடிகளை சந்திக்கப்போகிறீர்கள். நெருக்கமானவர்களுடன் பழகும்போது கவனம் வேண்டும். பணத்தை பார்த்து செலவு செய்யுங்கள். பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க அனுமனை வழிபாடு செய்து வந்தால் நல்லது கிடைக்கும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களே, உங்கள் ராசியில் செவ்வாய் மற்றும் சனியின் சஷ்டாஷ்டம அமைப்பு ஏற்பட போகிறது. இதனால் சில பிரச்சினைகள் நீங்கள் சந்திக்க நேரிடும். வாகனம் வாங்கப்போகிறவர்கள் சற்று தள்ளி வையுங்கள். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. வேலையில் முழு கவனம் தேவை. இல்லையென்றால் பிரச்சினைகள் உங்களை தேடி வரும். மன அழுத்தம் நேரிடலாம். கொஞ்சம் கவனம் தேவை.