நேருக்கு நேர் சந்திக்கப்போகும் சனி, செவ்வாய் கிரகம் - பேராபத்தை சந்திக்கப்போகும் 5 ராசிக்காரர்கள்
வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை சிம்ம ராசியில் செவ்வாய் கிரகம் சஞ்சரிக்கிறார். இதனால், கும்பத்தில் சனி பகவான் வக்ர நிலையை அடைகிறார்.
நேருக்கு நேர் சனி, செவ்வாய் கிரகம் சந்திக்கப்போவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எந்தமாதிரியான விளைவுகள் ஏற்படப்போகிறது என்று பார்ப்போம் -
மேஷம்
வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை செவ்வாயும், சனியும் நேருக்கு நேர் சந்திக்கப்போகிறார். இதனால், மேஷ ராசிக்காரர்களே நீங்கள் வயிறு தொடர்பான பிரச்சினைகளை சந்திக்கபோகிறீர்கள். உங்கள் உடல் மீது அக்கறை வேண்டும். அதேபோல் நீங்கள் சாப்பிடும் உணவை கனமுடன் சாப்பிட வேண்டும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையுடன் இருங்கள். குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்பட நேரிடும்.
கடகம்
வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை செவ்வாயும், சனியும் நேருக்கு நேர் சந்திக்கப்போகிறார். இதனால் கடக ராசிக்காரர்களே உங்கள் அடிக்கடி கோபம் ஏற்படும். கொஞ்சம் கவனம் வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது பார்த்து பேச வேண்டும். எக்காரணம் கொண்டும் மற்றவர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். குடும்பத்தில் உள்ள உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள்.
கன்னி
வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை செவ்வாயும், சனியும் நேருக்கு நேர் சந்திக்கப்போகிறார். இதனால் கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு நிதிநிலை சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணமும் அதிகமாக விரையமாகும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படலாம். இதனால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். கவனம் தேவை.
மகரம்
வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை செவ்வாயும், சனியும் நேருக்கு நேர் சந்திக்கப்போகிறார். இதனால், உங்களுக்கு பண செலவு ஏற்படும். அதனால், உங்களின் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வாகனம் ஓட்டும்போது மிகுந்த கவனம் தேவை. வேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்த்துவிடுவது நல்லது. அடிக்கடி உடல் வலி ஏற்படும். குடும்பத்தில் பிரச்சினைகள் தலைத்தூக்கும். இதனால் மனஅமைதி கெடும். செலவு செய்யும்போது கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.
மீனம்
வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை செவ்வாயும், சனியும் நேருக்கு நேர் சந்திக்கப்போகிறார். இதனால், நீங்கள் வேலை செய்யும் இடத்தில் வேலைகளை துரிதமாக செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்பு வீண் போகாது. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு பெருகும். பணியிடத்தில், உங்கள் அணுகுமுறையில் நிதானம் தேவை. அப்போதுதான் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். செவ்வாயின் அமைப்பால் உங்களின் கர்வம் அதிகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகள் அதிகம் காணப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |