ஆடிக் கிருத்திகை.., 12 ராசிக்கும் முருகர் சொல்லும் செய்தி என்ன?
ஆடிக் கிருத்திகை என்பது தமிழ் மாதமான ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திர நாளாகும்.
2026 ஆம் ஆண்டுக்கான ஆடிக்கிருத்திகை திருவிழா ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 7 ஆகிய தேதிகளில் அதாவது இன்று நடைபெற்று கொண்டுள்ளது.
கிருத்திகை நட்சத்திரம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாலை தொடங்கி பக்தர்களால் முருகப்பெருமானை வழிபட உகந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது.
இது முருகப்பெருமானை வழிபடவும், விரதம் இருக்கவும் உகந்த மிக முக்கியமான புனித நாளாகும்.
கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட முருகப்பெருமானை இத்திருநாளில் வழிபடுவது பல நன்மைகளைத் தரும்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றி, சரவணப் பொய்கையில் மலர்ந்த முருகப்பெருமானை கார்த்திகை பெண்கள் ஆறு பேர் அரவணைத்து வளர்த்தனர்.
கார்த்திகை பெண்களுக்குச் சிறப்புச் செய்யும் நாளாகவும், அவர்களின் பெயரால் கிருத்திகை விரதம் அனுசரிக்கப்படுகிறது.
இத்திருநாளில், கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் மற்றும் முருகனின் திருநாமங்களைச் சொல்லி வழிபடலாம்.
அந்தவகையில், ஆடிக் கிருத்திகை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்று டாரட் வாசிப்பாளர் சாரா இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |