விஜய்க்கு முழு அதிகாரம் - தவெக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் என்ன?
தவெக சிறப்பு பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தவெக சிறப்பு பொதுக்குழு
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த், பிரச்சார மேலாண்மை பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் வெங்கடராமன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
12 தீர்மானங்கள்
கரூர் நிகழ்வில் உயிரிழந்தோருக்காக இரங்கல் தெரிவித்து, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
SIR மசோதாவிற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் சரியாக நடைபெறாமல் விவசாயிகளை பாதிக்கும் விவசாய விரோத அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொழில் முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
மக்கள் சந்திப்பில் தலைவர் விஜயும், பொதுமக்களும் முழுமையான பாதுகாப்புடன் இருக்க தேவையான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கட்சியையும் அதன் நிர்வாகிகளையும் குற்றம்சாட்டி அவதூறு பரப்பும் ஆளும் கட்சியின் செயல்பாடுகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடிப்படை பொதுப் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்த நபர்களை கைது செய்து கருத்துரிமையை ஒடுக்குகிற அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எதிர்கால கூட்டணி முடிவுகள் தொடர்பாக முழு அதிகாரமும் தலைவர் தளபதி விஜய்க்கு வழங்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |