12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.., எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை 9.30 மணிக்கு வெளியானது.
கடந்த மார்ச் 2ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர்.
இந்நிலையில், நேற்று வெளியான முடிவுகளில் மொத்தமாக 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களில் 93.19 சதவீதமும், மாணவிகளில் 97 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.81 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 3,47,527 பேர் மாணவர்கள் ஆவர்.

மாவட்ட வாரியாக ஈரோடு மாவட்டம் 98.07 சதவீத தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் 98.05 சதவீதத்துடன் இரண்டாம் இடமும், கன்னியாகுமரி மாவட்டம் 97.63 சதவீதத்துடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளன.
அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதல் இடம், சிவகங்கை இரண்டாம் இடம், திருச்சி மூன்றாம் இடம் பெற்றுள்ளன.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.17 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், சிறைவாசிகள் 250 பேர் தேர்வு எழுதியதில் 238 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |