பிரெஞ்சு நகரமொன்றில் பள்ளிக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்: சிக்கலில் சிறுவன்
பிரெஞ்சு நகரமொன்றிலுள்ள பள்ளி ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதன் பின்னணியில் ஒரு சிறுவன் இருப்பது தெரியவந்தது.
சிக்கலில் சிறுவன்
பிரான்சிலுள்ள Thonon என்னும் நகரில் அமைந்துள்ள Jean-Jacques Rousseau School என்னும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
Snapchatஇல், மாணவ மாணவியர் யாரும் பள்ளிக்கு வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன், பள்ளி மீது குண்டு வீசப்படும் என்றும், பள்ளியின் முதல்வர் கடத்தப்படுவார் என்றும் அந்த செய்தி கூறவே, அங்கு பொலிசார் குவிக்கப்பட்டார்கள்.
ஆனால், அந்த மிரட்டலை விடுத்தது ஒரு 12 வயது சிறுவன் என பின்னர் தெரியவந்தது. அவனை பொலிசார் கைது செய்ய, சும்மா வேடிக்கைக்காக தான் அப்படிச் செய்ததாக அவன் கூறியுள்ளான்.
என்றாலும், அவன் அடுத்த மாதம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |