பிரித்தானியாவில் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! உண்மையை ஒப்புக்கொண்ட 14 வயது சகோதரன்
பிரித்தானியாவில் 11 வயது சிறுமி தனக்கே தெரியாமல் தனது 14 வயது சகோதரனின் குழந்தையை கருவில் சுமந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.
வேல்ஸில் ஒரு வீட்டில் 12 வயது சிறுமி ஒருவர் தனக்கு கடுமையாக வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதாக கூறியதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஓரிரு மணிநேரத்தில் அச்சிறுமி குழந்தையை பிரசவித்துள்ளார்.
அதன்பிறகு, மருத்துவர் சிறுமியிடம் பொறுமையாக "உடலுறவில் ஈடுபட்டாயா" என கேட்டுள்ளார், ஆனால் அதற்கு எனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார்.
பின்னர், பொலிஸ் அதிகாரிகள் சிறுமியின் சகோதரனை விசாரித்துள்ளனர். அப்போது, "நானும் எனது தங்கையும், அம்மா அப்பா வீட்டில் இல்லாதபோது குத்துச்சண்டை (Wrestling) செய்வோம். சண்டைபோட வசதியாக இருப்பதற்காக மெத்தை மேல் விளையாடுவோம். அப்போது இருவரும் முத்தம் கொடுத்துக்கொண்டோம்" என கூறிய சிறுவன், இருமுறை தனது சகோதரியுடன் உடலுறவில் ஈடுபட்டதாக அவன் ஒப்புக்கொண்டான்.
சிறுமிக்கு 11 வயதும், சிறுவனுக்கு 14 வயது இருக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் ஒரு வருடமாக சிறுமி தான் கர்ப்பமாக இருப்பதாக அறிந்திருந்தாரா என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு Swansea Crown நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரண்மைக்கு வந்தது. அப்போது சிறுவனை அடுத்த 30 மாதங்களுக்கு பாலியல் குற்றவாளியாக பதிவுசெய்ய உத்தரவிடப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் கேட்டபோது, தனது குழந்தையுடன் ஒரு சாதாரண வாழக்கையை வாழ விருப்பம் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.