மான்செஸ்டரில் 12 வயது சிறுமி மாயம்: பிரித்தானியாவில் ஆண்டுதோறும் கேள்விக்குறியாகும் 170,000 பேர்!

Missing Persons United Kingdom
By Thiru Apr 13, 2025 09:04 PM GMT
Report

பிரித்தானியாவில் 12 வயது சிறுமி காணாமல் போயுள்ள நிலையில், அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

12 வயது சிறுமி மாயம்

மான்செஸ்டரில் 12 வயது சிறுமி ஹோப் அரோஸ்மித் (Hope Arrowsmith) காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு நாட்களாக அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மான்செஸ்டரில் 12 வயது சிறுமி மாயம்: பிரித்தானியாவில் ஆண்டுதோறும் கேள்விக்குறியாகும் 170,000 பேர்! | 12 Yrs Old Manchester Girl Hope Arrowsmith Missing

காணாமல் போன சிறுமி ஹோப், கடந்த வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 11ஆம் திகதி, மாலை 6:50 மணியளவில் வைதன்ஷா ட்ராம் (Wythenshawe Tram) நிறுத்தத்தில் கடைசியாக பார்க்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் அடையாளங்கள்

பொயின்டனில் (Poynton) இருந்து வந்த சிறுமி ஹோப், 5 அடி 2 அங்குல உயரம் கொண்ட, மெல்லிய உடல்வாகு மற்றும் தோள்பட்டை வரை நீளமான பழுப்பு நிற முடியுடன் கூடிய பெண் என்று விவரிக்கப்படுகிறார்.

காணாமல் போன நேரத்தில், அவர் கருப்பு மற்றும் வெள்ளை நைக் விளையாட்டு ஷூக்கள், கருப்பு நைக் காலுறைகள், வெள்ளை ஹூடி, வெள்ளை டி-ஷர்ட் மற்றும் இளஞ்சிவப்பு ஷார்ட்ஸ் அணிந்திருந்தார்.

காவல்துறையின் அவசர வேண்டுகோள்

ஹோப்பை கண்டுபிடிக்க உதவும் வகையில் செஷயர் காவல்துறை (Cheshire Police) பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளது.

மான்செஸ்டரில் 12 வயது சிறுமி மாயம்: பிரித்தானியாவில் ஆண்டுதோறும் கேள்விக்குறியாகும் 170,000 பேர்! | 12 Yrs Old Manchester Girl Hope Arrowsmith Missing

அவரது இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அல்லது தொடர்புடைய சிசிடிவி (CCTV) அல்லது டேஷ் கேம் (dashcam) காட்சிகள் வைத்திருப்பவர்கள் முன்வருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று காவல்துறை அதிகாரி இஸி மோரல் (Izzy Morrall) தெரிவித்துள்ளார்.

தகவல் தெரிந்தவர்கள் 101 என்ற எண்ணை அழைத்து, IML 2067723 என்ற சம்பவ எண்ணை குறிப்பிட்டு காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். செஷயர் காவல்துறை இணையதளத்தின் மூலமாகவும் தகவல்களை சமர்ப்பிக்கலாம்.

பிரித்தானியாவில் காணாமல் போகும் நபர்கள்

"மிஸ்ஸிங் பீப்பிள்" (Missing People) என்ற தொண்டு நிறுவனத்தின் தகவல் படி, பிரித்தானியாவில் ஒவ்வொரு 90 வினாடிகளுக்கும் ஒருவர் காணாமல் போகிறார்.

பிரித்தானியாவின் காட்விக் விமான நிலையத்தில் வெடிப்பு சம்பவம்: பீதியில் உறைந்த பயணிகள்!

பிரித்தானியாவின் காட்விக் விமான நிலையத்தில் வெடிப்பு சம்பவம்: பீதியில் உறைந்த பயணிகள்!

புள்ளிவிவரம் இனம், கலாச்சார பின்னணி, வயது, சமூக பொருளாதார நிலை, பாலினம், பாலியல் நாட்டம், உடல் அல்லது மனநல சவால்கள், தொழில் அல்லது பிற பல்வேறு காரணிகள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் வாழ்க்கையின் அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கியது.

பிரித்தானியாவில் ஆண்டுதோறும் சுமார் 170,000 நபர்கள் காணாமல் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US