ஆன்மீக நிகழ்ச்சியில் 122 பேர் உயிரிழப்பு.., பின்னணியில் இருக்கும் போலே பாபா சாமியார் யார்?
ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் 122 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
122 பேர் மரணம்
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்கிற சாமியார் ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கானோர் கூடினர். அப்போது, மத நிகழ்வு முடிந்ததும் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில், இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்திய போலே பாபா என்ற சாமியார் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
யார் இந்த போலே பாபா?
இந்த போலே பாபா சாமியார் ஆன்மீகத்தில் சேவை செய்வதற்காக புலனாய்வு துறையில் தான் செய்துவந்த பணியை ராஜினாமா செய்ததாக பலமுறை தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இவர், உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கில் உள்ள பதௌர் நகரி என்ற கிராமத்தில் பிறந்துள்ளார். இவரது பெற்றோர் நன்னே லால் மற்றும் கதோரி தேவி ஆவார். இவருக்கு மொத்தம் 2 சகோதரர்கள். அதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
இவர் உத்தரப்பிரதேச மாநில காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்துள்ளார். மேலும், தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு புலனாய்வு பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.
பின்னர், ஆன்மீகத்தில் இருக்கும் விருப்பம் காரணமாக அந்த பணியை ராஜினாமா செய்துள்ளார். குறிப்பாக, ஆன்மீகத்தில் ஈடுபடுவோர் காவி உடையை தான் அணிவார்கள்.
ஆனால், இவர் அதற்கு மாற்றாக வெள்ளை நிற சூட் மற்றும் டை அணிவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவருக்கு வழங்கப்படும் நன்கொடை பணம் முழுவதையும் தன்னுடைய பக்தர்களுக்கு செலவு செய்து வருகிறார்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |