யூரோ மில்லியன்ஸ் ஜாக்பாட்: இரண்டு பிரித்தானியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்
யூரோ மில்லியன்ஸ் ஜாக்பாட் குலுக்கலில் இரண்டு பிரித்தானியர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிந்துள்ளது.
யூரோ மில்லியன்ஸ் ஜாக்பாட்
செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட்டில் பிரித்தானியாவைச் சேர்ந்த இரண்டு பேருக்கு அதிர்ஷ்ட மழை பொழிந்துள்ளது.
மொத்த பரிசுத் தொகையான £126 மில்லியனில் இருவரும் தலா £41.8 மில்லியன் என்ற மிகப்பெரிய பங்கினை தட்டிச் சென்றுள்ளனர்.
£126 மில்லியன் என்ற இந்த பிரமாண்ட பரிசு தொகையானது மொத்தம் 3 பேருக்கு பகிர்ந்து வழங்கப்பட்டு இருப்பதாக தேசிய லொட்டரி நிறுவனமான ALLWYN உறுதிப்படுத்தியுள்ளது.

பரிசுத் தொகையை வென்ற ஒவ்வொருவருக்கும் தலா £41,844,863.30 கிடைத்துள்ளது.
யூரோ மில்லியன் ஜாக்பாட்டில் வெற்றிக்கான முக்கிய எண்களாக 13,16,29,40,47 மற்றும் லக்கி ஸ்டார்ஸ் 3,4 ஆகும்.
ALLWYN நிறுவனத்தின் வெற்றி ஆலோசகர் ஆண்டி கார்ட்டர், வெற்றியாளர்கள் மற்றும் முடிவுகள் குறித்த தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |