பிரித்தானியாவுக்கு வர இதுவரை இத்தனை லொறி ஓட்டுநர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்? உண்மையை உடைத்த பிரதமர் போரிஸ் ஜான்சன்
பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றிய லொறி ஓட்டுநர்களுக்கு தற்காலிக விசா வழங்கும் திட்டத்தில் இதுவரை எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற விவரத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளிப்படுத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய நிலையில் அங்கு, லொறி ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், எரிப்பொருள் உட்பட அனைத்து பொருட்களின் விநியோக சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டு, நாட்டில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த லொறி ஓட்டுநர்கள் 5,000 பேருக்கு தற்காலிக விசா வழங்கும் திட்டத்தை பிரித்தானியா அரசு அறிவித்தது.
இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரித்தானியா வர விண்ணப்பித்துள்ள ஓட்டுநர்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது, பிரித்தானியாவுக்கு வர விருப்பமுள்ள ஓட்டுநர்களின் விவரங்களை வழங்குமாறு போக்குவரத்து துறையிடம் விவரம் கேட்கப்பட்டது.
இதுவரை மொத்தம் 127 ஓட்டுநர்கள் மட்டுமே பிரித்தானியாவுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் ஓட்டுநர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை இது காட்டுகிறது என போரிஸ் ஜான்சன் கூறினார்.
ஆனால், வெறும் 27 ஓட்டுநர்கள் தான் தற்காலிக ஓட்டுநர் விசா வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்துள்ளதாக டைம்ஸ் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.