தலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பாடசாலை மாணவன்! இந்திய மாநிலத்தில் நடுங்கவைத்த சம்பவம்
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் பாடசாலை மாணவர் தலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுட்டுக் கொன்ற மாணவன்
மத்திய பிரதேசத்தின் சத்தர்பூரில் உள்ள அரசு பாடசாலையின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சுரேந்திர குமார் சக்சேனா (55).
இவரை 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். சத்தம் கேட்டு பாடசாலை ஊழியர்கள் பதறியடித்து ஓடிவந்தனர்.
கொல்லப்பட்ட சக்சேனாவின் உடல் பாடசாலையின் கழிவறை அருகே கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் தலைமை ஆசிரியரின் உடலைக் கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
வழக்குப்பதிவு
அப்போது சுட்டுக்கொன்ற மாணவருக்கு மற்றொரு மாணவர் உதவி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் ஓடிவிட்டதும், சுட்ட மாணவர் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றதும் தெரிய வந்தது.
இச்சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தப்பியோடிய மாணவர்களை தேடி வருகின்றனர்.
தலைமை ஆசிரியரை மாணவர் பாடசாலையில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |