லண்டனில் 13 வயது சிறுவனின் படுபாதக செயல்! நீதிமன்றத்தில் ஆஜர்
பிரித்தானியாவின் வடக்கு லண்டனில் 13 வயது சிறுவன் மீது இரண்டு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
13 வயது சிறுவன்
இங்கிலாந்தின் வடக்கு லண்டன் பாடசாலையில் 13 வயது சிறுவன் சக மாணவர்களை கத்தியால் குத்தியுள்ளான்.

நல்வாய்ப்பாக தாக்குதலுக்கு உள்ளான 12 மற்றும் 13 வயதுடைய சிறுவர்களும் உயிர்தப்பினர். பின்னர் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒருவர் Trauma மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர்கள் தற்போது சீரான நிலையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் தாக்குதல்தாரி சிறுவனை பொலிஸார் கைது செய்தனர்.
முகத்தில் நச்சுப் பொருள்
அவர் மற்றொரு டீனேஜரின் முகத்தில் நச்சுப் பொருளைத் தெளித்ததாகவும் கூடுதலாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
இதனையடுத்து லண்டனின் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறையைச் சேர்ந்த ஹெலன் ஃப்ளானகன் கூறுகையில், "இவை ஓவர் சிறுவனுக்கு எதிரான மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகள், மேலும் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், பரந்த பாடசாலை சமூகத்திற்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம்" என்றார்.
குறித்த சிறுவன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் இளைஞர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |