இலங்கையில் காணாமல் போன 13 வயது சிறுவன்: பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை
இலங்கையில் 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன சிறுவன்
இலங்கையின் கிளிநொச்சி பொன்நகரை சேர்ந்த 13 வயது சிறுவன் 13ம் திகதி முதல் காணாமல் போய் இருப்பது கவலை ஏற்படுத்தியுள்ளது.
சித்திரை புத்தாண்டு புத்தாடைகள் கொள்வனவு செய்வதற்காக சென்ற நிலையில், தண்ணீர் குடிக்க சென்ற சிறுவன் மீண்டும் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன 13 வயது சிறுவன் பொன் நகர், கிளிநொச்சியை சேர்ந்த பஸ்மின் நவீத் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுவனின் நிலையை கண்டுபிடிக்க பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
அதே நேரத்தில் காணாமல் போன சிறுவன் தொடர்பான தகவல்கள் தெரிந்த பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை முன்வந்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
சிறுவன் தொடர்பான தகவல் தெரிந்தால் 0771824506 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு உறவினர்கள் கோரியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |