லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது
லண்டன் பள்ளியில் இரண்டு சிறுவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்
லண்டனின் ப்ரெண்ட்(Brent) பகுதியில் பேக்கன் லேன்(Bacon Lane) என்ற இடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் புதன்கிழமை கத்திக்குத்து தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் 12 வயது மற்றும் 13 வயதுடைய இரண்டு பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பான தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அவசர கால சேவையினர், பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கி பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
ஆனால் காவல்துறை அதிகாரி லூக் வில்லியம்ஸ் தெரிவித்த தகவலில், சிறுவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
13 வயது சிறுவன் கைது
பள்ளியில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய நபரை தேடி வந்த பொலிஸார், தற்போது 13 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.
அந்த சிறுவன் கொலை முயற்சி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு பொலிஸார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |