லண்டனில் 13 வயது சிறுவன் மாயம்: பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள்
பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுவனை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காணாமல் போன சிறுவன்
வடக்கு லண்டன் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து 13 வயது அப்துல்(Adbul) என்ற சிறுவன் சுமார் 2 வாரங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில் மெட் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 13ம் திகதி இஸ்லிங்டன்(Islington) பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்து வெளியே சென்ற அப்துல்(Abdul) அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்பதை குறிப்பிட்டு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

குளிர் அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் 13 வயது சிறுவன் காணாமல் போயிருப்பது அவரது குடும்பத்தினர் மற்றும் பொலிஸார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனின் அடையாளம்

தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள பொலிஸார், தற்போது அப்துல் ஹவுன்ஸ்கோ(Hounslow) பகுதியில் இருக்க கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சிறுவன் கடைசியாக கருப்பு நிற டிராக் சூட்டும், வெள்ளை நிற காலணிகளும் அணிந்து இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
சிறுவன் அப்துல் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அவசர தொடர்பு எண்: 999 ஐ அழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |