Electric Scooter-யை விட அதிக தூரம் செல்லும் Electric cycle.., விலை மற்றும் சிறப்பம்சங்கள்
டெகத்லான் (Decathlon) நிறுவனமானது ராக்ரைடர் இ-ஏசிடிவி 900 (Rockrider E-ACTV 900) எனும் தாழ்வான ஃப்ரேமைக் கொண்ட ஹைபிரிட் எலெக்ட்ரிக் மிதிவண்டியை (Hybrid e-bike) விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
Electric cycle அறிமுகம்
டெகத்லான் (Decathlon) நிறுவனம் தற்போது ராக்ரைடர் இ-ஏசிடிவி 900 (Rockrider E-ACTV 900) எலெக்ட்ரிக் மிதிவண்டியை பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்து வருகிறது.
இதில், ஸ்கூட்டர்களில் வழங்கப்படுவதைப் போல சிவிடி (Continuously Variable Transmission) gear facility உள்ளது. இது, Ride with Assistance வசதியுடன் ஓர் முழு சார்ஜில் 130 கிமீ தூரம் வரை பயணிக்கும்.
இந்த காரணத்தினால் பலரும் இந்த மின்சார மிதிவண்டியை விரும்புகின்றனர். முக்கியமாக இந்தியர்கள் அதிகமாக விரும்புகின்றனர். ஆனால், இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்படவில்லை.
அதேநேரம் , இந்திய சந்தையிலும் இதுபோன்று அதிகம் ரேஞ்ச் தரக் கூடிய இ-சைக்கிள்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால், குறைந்த மொடல்களே உள்ளன.
அதுவும், 100 கிமீ அல்லது அதற்கும் குறைவான ரேஞ்சை வழங்கக் கூடிய மின்சார சைக்கிள்களே கிடைக்கின்றன. இந்த காரணத்தால் டெகத்லானின் ராக்ரைடர் இ-ஏசிடிவி நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், 694Wh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சைக்கிளின் ஃப்ரேமுக்குள்ளேயே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், குறைந்தபட்சம் 250W-ம், அதிகபட்சம் 600W பவரையும் வெளியேற்றும் திறன் கொண்ட Electric motor உள்ளது. இந்த மோட்டார் 65 என்எம் டார்க் வரை வெளியேற்றும்.
இதன் ஹேண்டில்பாரில் சிறிய கன்சோல், USB charging port உள்ளது.இந்த திரையை டெகத்லான் ரைடு ஆப்பை இணைக்க முடியும். மேலும், இதில் Tektro T280 hydraulic disc brake உள்ளன.
இது, எஸ் (S), எம் (M) மற்றும் எல் (L) ஆகிய அளவுகளில் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.2,67,821 ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |