1300 ஆண்டுகள் பழமையான தண்ணீரில் மிதக்கும் நகரம்! (உலக செய்திகளின் தொகுப்பு)
பிரித்தானியாவைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா அரசு அலுவலக செல்போன்களில் டிக் டாக் செயலிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
150 அடி அகலம் கொண்ட விண்கல் ஒன்று வரும் 6-ம் திகதி பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.
எகிப்து தலைநகரான கெய்ரோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள செல்பி ஹால் என்னும் தீம் பார்க் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சீனாவில் 1,300 ஆண்டுகள் பழமையான தண்ணீரில் மிதக்கும் வுஷன் நகரம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அமெரிக்காவின் நாஷ்வில் நகரில், துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தடுக்க வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவர்கள் டென்னசி மாகாண தலைமையகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில், கடலில் தவறி விழுந்து ராட்சத அலைகளில் சிக்கி உயிருக்கு போராடிய நபரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.